வேன் மோதி லாட்ஜ் மேனேஜர் பரிதாப பலி..

கோவை : தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சாய்பாபு (வயது 65) லாட்ஜ் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் கவுண்டம்பாளையம், சேரன் நகர் சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பிக்கப் வேன் இவர் மீது மோதியது. இதில் சாய்பாபு படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது . இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசரரணை நடத்தினார் .இது தொடர்பாக வேன் ஒட்டி வந்த ஏ. கே .ஆர்.காலனியை சேர்ந்த பிரகாஷ் (வயது 25) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..