சேவல் சண்டை சூதாட்டம்- 5 பேர் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர்,விரால் பட்டி வாய்க்கால் மேடு பகுதியில் நேற்று மாலை சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் அங்கு சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக உடுமலை சின்ன பொன்கலை கருப்பசாமி ( வயது 40 )புங்கபுத்தூர் ராம்குமார் (வயது 32) உடுக்கம்பாளையம் கோவிந்தராஜ் (வயது 51) கொடுங்கியம் திருமலைசாமி (வயது 48) புங்கமுத்தூர் மோகன்ராஜ் ( வயது 45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2 சேவல்களும், சூதாட பயன்படுத்தப்பட்ட 27 ஆயித்து 100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.