கோவை ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி எப்)போலீசார் கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது பிளாட்பாரத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பிளாட்பாரத்தில் 2 சாக்கு முட்டைகள் அனாதையாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பிரித்து பார்த்த போது அதில் 31 வெளிமாநில (பாண்டிச்சேரி) மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யாரோ ரயிலில் கடத்தி வந்துள்ளனர். இந்த மது பாட்டில்கள் கோவை மதுவிலக்கு அமுல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.இதை கடத்தி வந்தது யார் ?என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை ரயில் நிலையத்தில் அனாதையாக கிடந்த மது பாட்டில்கள் பறிமுதல்.!!
