நம்பரை பிளாக் செய்த ஆத்திரத்தில்… கல்லூரி மாணவரை தாக்கி கொல்ல முயற்சி – 2 பேர் கைது..!

கோவை கணபதி,மணியக்காரன் பாளையம் பாலமுருகன் நகரை சேர்ந்தவர் ஜஹாங்கீர் இவரது மகன் பர்வேஸ் அஹமது ( வயது 18) சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி. இ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி அவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஒரு மிரட்டல் மெசேஜ் வந்தது .அதன் பின்னர் அவர் அந்த நம்பரை பிளாக் செய்து விட்டு வைத்து விட்டார். இந்த நிலையில் அவரது மகன் பிரகாஷ் அகமது கணபதி உள்ள சலூனுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கணபதி பாலமுருகன் நகரை சேர்ந்த நவீன் ( வயது 18) சையத் பயாஸ் வயது (17) தஷ்வந்த் ஆகியோர் சேர்ந்து ஏன்? செல்போன் என்னை பிளாக் செய்தாய் என்று கூறி பர்வேஷ் அகமதுவை தாக்கினார்கள். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது . இது குறித்து அவரது தந்தை ஜஹாங்கீர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் நவீன் (வயது 18) சையத் பயாஸ் (வயது 17 ) ஆகியோரை கைது செய்தனர். தஸ்வந்த் என்பவரை தேடி வருகிறார்கள்..