நாமும் ஓரு ஓ!போடலாமே!! துணிச்சலாக சீறும் பாம்பை பிடித்த வீரமங்கை..!

பெண் வனத்துறை அதிகாரி ஒருவர் சினம் கொண்ட ராஜ நாகத்தினை லாவகமாக பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தற்போது மக்கள் வசிக்கும் பகுதியில் கொடிய விஷம் நிறைந்த பாம்புகள் வருவது சாதாரணமாகி வருகின்றது. முன்பு பாம்பை அவதானித்தால் அடித்துக் கொல்லும் மக்கள் தற்போது இதனை மீட்பதற்கு பாம்பு பிடி நபர்களை அனுகி வருகின்றனர்.

பல்லுயிர் சமன்பாட்டிற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது பாம்பு வகைகள். சமீபத்தில் கேரளாவில் பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் ராஜநாகம் பிடிக்கும் போது ஏற்பட்ட விபரீதத்தினால் தாக்கப்பட்டு தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் பெண் வனத்துறை அதிகாரியான ரோஷினி என்பவர் ராஜநாகம் ஒன்றினை லாவகமாக பிடித்து பையில் அடைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாம்பு பிடிப்பதில் திறன் வாய்ந்த நபர்களாக இருந்தாலும், அதற்கான உபகரணங்களை கொண்டு தான் பிடிக்க வேண்டும் என்பது தீவிர சிகிச்சைக்கு பின்பு உயிர் பிழைத்திருக்கும் வாவா சுரேஷின் நிலையே எடுத்துக்காட்டாகும்.