தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர், சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், தமிழ்நாடு காவல்துறை குடும்பத்தில் 12 ஆம் மாணவ, மாணவிகளுக்கான “தழைக்கட்டும் நமது தலைமுறை-2022” என்ற தலைப்பிலான வழிகாட்டி நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இன்று துவங்கி வைத்தார்.
கோவை மாநகர பீளமேடு பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர், சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம் மாணவமாணவிகள் மத்தியில் பேசினார். இந்நிகழ்ச்சியில், பல்வேறு கல்லூரி முனைவர்கள், பேச்சாளர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில், மேற்கு மண்டலத்தை சேர்ந்த காவல் துறையினர் குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் – 256 பேர், மற்றும் அவர்களது பெற்றோர்கள் – 357 பேர், என மொத்தம் 613 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவ – மாணவிகள் அவர்களது சந்தேகங்களை சிறப்பு விருந்தினர்களிடம் கேட்டு பயன் அடைந்தனர்.