கோவையில் லாரி மோதி தொழிலாளி பரிதாப பலி..

கோவை: பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டி, வைகை நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45) கூலிதொழிலாளி .இவர் நேற்று மதுக்கரை அருகே கோவை- பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி இவர் மீது மோதியது. இதில் ஆறுமுகம் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். இது குறித்து அவரது மனைவி பழனியம்மாள் மதுக்கரை போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் வைரம் லாரி டிரைவர் நடேசன் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.