கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசுக்கு ஒரு ஓ! போடுங்க… ரூ.30 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 302 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 பேர் கைது.!!

தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையாளர் முனைவர் அ. அமல்ராஜ் தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் அறவே இருக்கக் கூடாது என்ற கடுமையான உத்தரவின் பேரில் கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆணையாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் வண்டலூர் சுற்று வட்டார பகுதிகளில் மர்ம ஆசாமிகள் சிலர் வெளிமாநிலத்தில் இருந்து அதிக போதை ஏற்றும் கஞ்சாவை வாங்கி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் வண்டலூர் பேருந்து நிலையம் அருகே மூன்று மர்ம ஆசாமிகள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சூப்பர் கஞ்சாவை ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வந்து அங்கிருந்து தாம்பரம் கூடுவாஞ்சேரி வண்டலூர் ஆகிய பகுதிகளில் சில்லறை விற்பனை செய்வதாக 1. தேவார கங்கா ராஜு (32) 2. பித்தானி ராஜ் பாபு(40).3. நாகி ரெட்டி ரமணா(32) என மூன்று பேர் போலீஸ் வசமாக சிக்கிக் கொண்டனர். ரூ 30 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 302 கிலோ கஞ்சா கஞ்சாவை கைப்பற்றும்போது ஐயா எங்களை விட்டுடுங்க இந்த பக்கமே வரமாட்டோம் இந்த மாதிரியான கஞ்சா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தான் கிடைக்கும் என போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர் .வண்டலூர் ரயில் நிலையம் அருகே பதுக்கி வைத்திருந்த அனைத்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர் . மொத்தமாக பதுக்கி வைத்திருந்த கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் . பின்பு சிறையில் அடைத்தனர்.