ரூ.5 லட்சம் கேட்டு பள்ளி மாணவி கடத்தல் – தொழிலாளி கைது..!

கோவை அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் ராமசாமி ( வயது 52 )கட்டிட தொழிலாளி. பீளமேடு பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். அப்போது அவருடன் வேலை செய்து வரும் 43 வயதான பெண்ணுடன் ராமசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பெண்ணின் கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் .ராமசாமி யுடன் பழகிய அந்த பெண் அவரிடம் அடிக்கடி பணம் கேட்டு வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் அந்தப் பெண் திடீரென்று ராமசாமியிடம் பேசுவதை தவிர்த்தார். அத்துடன் அவருடன் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி அந்த பெண்ணை பழிவாங்க அவரின் மகளை கடத்திச் செல்ல திட்டமிட்டார். இதற்காக நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் பள்ளிக்கூடம் அருகே சென்றார். அப்போது அந்த பெண்ணின் மகள் பள்ளிக்கூடம் முடிந்து வெளியே வந்தார். உடனே அவர் அந்த மாணவியிடம் சென்று என்னுடன் வா என்று கூறினார். ராமசாமி தனது வீட்டின் அருகே இருப்பதால் தனக்கு தெரிந்தவர் தானே என்று நினைத்து மாணவி அவருடன் சென்றார் .இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர் வேலை செய்து வரும் நிறுவனத்தில் உரிமையாளர் செல்போனுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அதில் தான் முருகன் பேசுவதாகவும் உங்கள் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஊழியரின் மகளை நான் கடத்தி வைத்துள்ளதாகவும், ரூ 5லட்சம் கொடுத்து விட்டு அந்த குழந்தையை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார். உடனே அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தனக்கு வந்த செல்போனில் எண்ணை அந்த மாணவியின் தந்தையிடம் கொடுத்தார் .உடனே அவர் தனது மனைவியுடன் சேர்ந்து அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய நபர் தான் முருகன் பேசுவதாகவும் உங்கள் மகளை ஒப்படைக்க வேண்டும் என்றால் ரூ 5 லட்சம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் அந்த குழந்தையை நான் என்ன செய்வேன்? என்பது எனக்கு தெரியாது என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். செல்போனில் மறுமுனையில் பேசிய நபரின் குரலை கேட்டு அந்த பெண் இது ராமசாமி குரல் தான் என்பதை உறுதி செய்ததுடன் இதுகுறித்து இரவு 8 மணி அளவில் பீளமேடு போலீசில் புகார் செய்தார் .அத்துடன் ராமசாமி பேசிய செல்போன் எண்ணையும் போலீசாரிடம் கொடுத்தார். உடனே போலீசார் அந்த செல்போன் எனக்கு தொடர்பு கொண்டனர் இதையடுத்து பயந்து போன அவர் இரவு 10 மணி அளவில் மாணவியை இறக்கி விட்டு தப்பி சென்று விட்டார். அங்குசென்றபோலீசார் அந்த மாணவியை மீட்டனர். அவரிடம்விவரம் கேட்டறிந்தனர். அவர் கூறியவிவரத்தை வைத்து கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பாப்பம்பட்டி பிரிவு அருகே அவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வது பதிவாகி இருந்தது. உடனே போலீசாரஅந்த பகுதிக்கு விரைந்தனர். போலீசார் வருவதை பார்த்த ராமசாமி தப்பிக்க முயற்சி செய்தார் .அதற்குள் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்..ரு 5 லட்சம் கேட்டு மாணவியை கடத்திச் சென்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.