கோவை கவுண்டம்பாளையம், சேரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது 13-வயது மகள் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அருகில் உள்ள கடைக்கு சாமான் வாங்க சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை .இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் துடியலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மாணவியை செஞ்சேரிமலை, மலப் பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகனும் தனியார் பஸ் கண்டக்டருமான சபரிநாதன் ( வயது 27) என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது .இதையடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட கண்டக்டர் சபரிநாதன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Leave a Reply