கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் – மேலும் 2 ஆசிரியர்கள் கைது..!

கனியாமூர் மாணவி மர்ம மரணத்தில் மேலும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் நேற்றைய போராட்டம் வன்முறையாக வெடித்தது . இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு நிலையில் , ஜூலை 31ஆம் தேதி வரை கள்ளக்குறிச்சி தாலுக்கா சின்னசேலம் நயினார் பாளையத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவியின் மரணம் தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் .பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் .முதல்வர் சிவசங்கரன் .செயலாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மர்ம மரணம் தொடர்பாக வேதியியல் ஆசிரியர் ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர், கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.