லாரி-பைக் மோதல். கல்லூரி மாணவர் பலி.

கோவை சிவானந்தா காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டை சேர்ந்தவர் சுனில். இவரது மகன் அஸ்வின் (வயது 19) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று ஆர் எஸ். புரம் காமராஜர் ரோட்டை சேர்ந்த தனது நண்பர் மவுலி (வயது 18) என்றவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.மேட்டுப்பாளையம் ரோடு சங்கனூர் பாலம் அருகே சென்றபோதுஅந்த வழியாக வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது.இது பைக் பின்னால் இருந்த அஸ்வின் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். பைக் ஓட்டி வந்த மௌ மவுலி படுகாயத்துடன் தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரோஜா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாகமயிலேறி பாளையம் அண்ணா நகரை சேர்ந்த டிரைவர் மனோஜ் ( வயது 24 ) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.