கடன் தொல்லையால் டிராவல்ஸ் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் ,அஜந்தா நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி ( வயது 65) டிராவல்ஸ் நடத்தி வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது .இதனால்நிறைய பேரிடம் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆரோக்கியசாமி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் விட்டத்தில் நைலான் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி ரோசி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.