கோவை மாநகராட்சி உதவி கமிஷனருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

கோவை தெற்கு உக்கடம் அன்பு நகர், ரேஷ்மா கார்டனைசேர்ந்தவர் நாசர் ( வயது 47) இந்திய தேசிய கட்சி மாநில பேச்சாளராகவும் உள்ளாரஇவர் நேற்று உக்கடம் அன்புநகர் பகுதியில் அடிப்படை வசதி கோரி கோவை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள கமிஷனர் -மேயர் அறை முன் நின்று உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இவரை போலீசார் கைது செய்தனர்.முன்னதாக இவர் மாநகராட்சி அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வரும் ஜீவராஜ் ( வயது 58) என்பவரிடம் தகராறு செய்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து ஜீவராஜ் உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நாசரை கைது செய்தனர்..இவர் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாத தடுத்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர் தற்போது ஆட்டோ ஓட்டி வந்தார். 1998-ம் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுவிடுதலை செய்யப்பட்டுள்ளார்.இவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.