கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் வருகின்ற 30-ந் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெறும் என மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறியிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகராட்சியில் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் நடைபெற இருந்தது. இந்த மாமன்ற கூட்டம் தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால் 30-ந் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply