நகைகடை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் செயின் கொள்ளை..!

கோவை: கோவையை அடுத்த கோவில்பாளையம், கொண்டயம்பாளையம் பக்கம் உள்ள வரதையங்கார் பாளையத்தில் வசிப்பவர் செல்வராஜ், இவரது மகன் வினோத்குமார் ( வயது 33) இவர் கோவையில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி பிரசவத்துக்காக சிவானந்தா மில் பகுதியில் உள்ள பெற்றோர்கள் வீட்டுக்கு சென்று விட்டார்.கடந்த 14ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வினோத்குமார் மனைவி பார்க்க மாமனார் வீட்டுக்கு சென்றார்.அங்கு தங்கி இருந்தார் நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அவருக்கு செல்போனில் தகவல் கொடுத்தனர் வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது .உள்ளே வைத்திருந்த 8 பவுன் எடை கொண்ட 3 தங்கச் செயின்களை காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து வினோத்குமார் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.