தமிழக பள்ளிகளில் விரைவில் இது கட்டாயமாகும்-தலைமை செயலர் இறையன்பு புதிய அறிவிப்பு.!

விரைவில் தமிழக பள்ளிகளில் செஸ் கட்டாயமாகும் என்று தலைமை செயலர் இறையன்பு அறிவித்துள்ளார்.

செஸ் ஒலிம்பிக் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய தலைமைச் செயலாளர் இறையன்பு, ஆர்மீனியா பள்ளிகள் போன்று தமிழக பள்ளிகளிலும் செஸ் விளையாட்டு ஒருநாள் கட்டாயமாகும் என்று கூறியுள்ளார். நமது வாழ்க்கையில் கண்ணுக்கு தெரியாத போராட்டங்களை நாம் எப்படி எதிர்கொண்டு வெல்வது என்பதை செஸ் சொல்லிக் கொடுக்கிறது. போர் புரிவதற்கான தந்திரங்களையும் செஸ் விளையாட்டு கற்றுத் தருகிறது. ஆர்மீனியா நாட்டில் உள்ள பள்ளிகளில் செஸ் விளையாட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தில் உள்ள பள்ளிகளிலும் ஒருநாள் செஸ் போட்டி கட்டாயம் ஆக்கப்படும். செஸ் விளையாட்டு பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பதை கூறுகிறது என்று கூறியுள்ளார். செஸ் விளையாடுவது நினைவாற்றலையும், முடிவெடுக்கும் திறனையும் மேம்படுத்த பயன்படுகிறது என்று கூறிய அவர், பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றும், கண்ணுக்கு தெரியாத போராட்டங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் எனவும் செஸ் கற்றுத்தருவதாக குறிப்பிட்டார்.