திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் இணைகிறாரா..?

திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரம்பரியமாக திமுகவில் பல ஆண்டுகளாக இருந்தும், தனது தந்தைக்கும் தனக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் பாஜகவில் சேர சூர்யா முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இரண்டொரு நாளில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை வந்ததும், அவரை நேரில் சந்தித்து கட்சியில் இணையவுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் திமுகவின் பிரபல பேச்சாளரும் நாடாளுமன்ற மூத்த உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணையவுள்ளதாக வெளியான செய்தி அக்கட்சியில் குறிப்பாக திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.