வட்டியில்லா கடன்… பாகிஸ்தானின் புதிய திட்டம் சாத்தியமா..? ஆச்சிரியத்தில் உலக நாடுகள்..!

பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் டார், மத்திய அரசு நாட்டில் வட்டியில்லா வங்கி முறையை விரைவில் அமல்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் முழுவதும் மந்த நிலையால் சிக்கித் தவித்து வரும் நிலையில், பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. பணவீக்கத்தினை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன.இதன் மூலம் பணவீக்கத்தினை கட்டுப்படுத்த முடியும் என பல்வேறு நாடுகளும் திட்டமிட்டு வருகின்றன.

ஆனால் இந்த காலகட்டத்தில் 0% கடன் கொடுத்தால் என்னவாகும்? என்று யோசிக்கவே முடியவில்லை. ஆனால் பாகிஸ்தான் அரசு இப்படியொரு திட்டத்தினை கையில் எடுத்துள்ளது . பாகிஸ்தான் அரசு 0% வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கப் வங்கிகளின் அமைப்பை மாற்ற போவதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார், இஸ்லாமிய சட்டப்படி வட்டியில்லா வங்கி சேவை வழங்கப் போவதாகவும், இந்த சேவையானது 2027ம் ஆண்டிற்குள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடு பெரும்பாலும் இஸ்லாமிய மக்கள் நிறைந்த ஒரு நாடாகும். இஸ்லாமிய மத சட்டங்களின் படி, வட்டிக்கு கடன் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த வட்டியில்லா கடன் வழங்கும் முறையை 2027ம் ஆண்டுக்குள் கொண்டு வர பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தானில் இயங்கி வரும் மத்திய ஷரியத் நீதிமன்றங்கள், இந்த ஷரியத் சட்டத்தினை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்கின்றன. ஷரியத் நீதிமன்றங்கள் மக்களிடம் வரி வசூலிப்பதை ஷரியத் சட்டத்திற்கு எதிரானது என கூறுகின்றது.

இதற்கிடையில் தான் 2027-க்குள் பாகிஸ்தான் இந்த வட்டியில்லா வங்கி நடைமுறையை அமல்படுத்த எடுத்து வரும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. 2027ம் ஆண்டிற்குள் வட்டி வசூலிக்கும் வங்கி அமைப்பினை ரத்து செய்யப்போவதாகவும், இது குறித்து பாகிஸ்தான் அரசின் அனுமதியுடன், இஸ்லாமிய முறைப்படி நடவடிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வட்டி இல்லாத வங்கி அமைப்பை ஏற்படுத்துவது மிக சவாலானதாக இருக்கும். எனினும் இதனை குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டமிடப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் இத்தகைய முடிவு செயல்பாட்டுக்கு சரிவருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பாகிஸ்தானின் இந்த வட்டியில்லா வங்கி திட்டமானது செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், வங்கிகள் வட்டியில்லா கடன் கொடுக்கலாம். இதன் மூலம் மக்கள் வட்டியில்லாமல் கடன் பெற முடியும். இதன் மூலம் மக்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கலாம். இது நுகர்வினையும் அதிகரிக்க வழிவகுக்கலாம். இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். எனினும் பாகிஸ்தான் வங்கிகளின் எதிர்காலம் என்னவாகுமோ? என்ற அச்சமும் எழுந்துள்ளது.

வங்கிகளின் முக்கிய வருவாய் ஆதாரம் என்பது வட்டி வருவாய் ஆகும். அந்த வட்டி வருவாய் கிடைக்கவில்லை எனில், வங்கிகளின் எதிர்காலம் என்னவாகும்? என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தான் மட்டும் வட்டியே இல்லாமல் ஒரு சூழ்நிலையை உருவாக்க திட்டமிட்டு வருகின்றது. இது எந்தளவுக்கு சாத்தியமானது என்று அமலுக்கு வந்தால் தான் தெரியும்.