இன்று கோவை வருகிறார் உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி .டேவிட்சன் தேவ ஆசீர்வாதம்..!

கோவை: முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் நாளை கோவை வருகிறார்.காரில் ஈரோட்டுக்கு செல்கிறார். அங்கு ஒரு திருமண விழாவில் பங்கேற்கிறார்.பின்னர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.முதலமைச்சர் வருகையை ஒட்டி அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க தமிழ்நாடு உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் இன்று மதியம் விமானம் மூலம் கோவை வந்தார்.பின்னர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை சரக டிஐஜி முத்துசாமி மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இன்று மாலை ஈரோடு புறப்பட்டு செல்கிறார்.