கோவையில் 30,14,972 வாக்காளர்கள் – பட்டியலை வெளியிட்டார் கலெக்டர் சமீரன்..!!

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 14,82,079 ஆண் வாக்காளர்களும், 15,32,354 பெண் வாக்காளர்களும், 3ம் பாலினத்தவர்கள் 539 பேரும் என மொத்தம் 30,14,972 பேர் உள்ளனர். 1-1-2023, 1-4-2023, 1-7-2023, 1-10-2023 அன்று 18 வயது பூர்த்தியாகி இருப்பின் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை இணைக்க கோரி விண்ணப்பம் அளிக்கலாம். அதேபோன்று வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் மற்றும் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் பெயர் நீக்குதல் ஆகியவற்றுக்கும் விண்ணப்பங்கள் அளிக்கலாம். இதற்காக விண்ணப்பங்களை வருகிற 9- ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ந் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் மாவட்டத்தில் உள்ள வாக்கு பதிவு மையங்கள், உதவி வாக்காளர் அலுவலர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும். இது தவிர வருகிற 12-11-22, 13-11-22 மற்றும் 26-11-22 27-11-22 ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
இதில் வாக்காளர்கள் தங்களுக்கான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6ன் மூலமாகவும், ஏற்கனவே உள்ள பதிவில் திருத்தம் செய்யவும், முகவரி மாற்றம் செய்யவும், படிவம் 8-யை பயன்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய www.nvsp.in எனும் இணைய முகவரி வாயிலாகவோ அல்லது ‘Voters Helpline App’ என்ற செயலி மூலமாகவோ விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக மனுக்களை பதிவேற்றம் செய்யலாம். இ சேவை மையங்கள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 5-1-2023 அன்று வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேட்டுப்பாளையம் ஆண்- 142370, பெண்-152423, மற்றவர்-47, மொத்தம்-294840.

சூலூர் ஆண்-152724, பெண்-160613, மற்றவர்-68, மொத்தம்-313405

கவுண்டம்பாளையம் ஆண்- 225909, பெண்-227241, மற்றவர்-119, மொத்தம்-453269

கோயம்புத்தூர் வடக்கு ஆண்-164994, பெண்-163426, மற்றவர்-36, மொத்தம்-328456

தொண்டாமுத்தூர் ஆண்-158599, பெண்-162577, மற்றவர்-112, மொத்தம்-321288

கோயம்புத்தூர் தெற்கு ஆண்-120668, பெண்-121612, மற்றவர்-33, மொத்தம்-242313

சிங்காநல்லூர் ஆண்-158671, பெண்-161660, மற்றவர்-22, மொத்தம்-320353

கிணத்துக்கடவு ஆண்-157641, பெண்-164060, மற்றவர்-39, மொத்தம்-321740

பொள்ளாச்சி ஆண்-106178, பெண்-115551, மற்றவர்-42, மொத்தம்-221771

வால்பாறை ஆண்-94325, பெண்-103191, மற்றவர்-21, மொத்தம்-197537

மொத்தம் ஆண்-1482079, பெண்-1532354, மற்றவர்-539, மொத்தம்-
30,14,972