தமிழ்நாட்டை பார்த்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்” – காரணத்தை புட்டுபுட்டு வைத்த பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்..!

மிழ்நாடு சோசியலிச மற்றும் சமூக நீதிக் கருத்துகள் கொண்ட கட்சிகள் சங்கமிக்கும் தளமாக உள்ளது என தேஜஸ்வி யாதவ் பேசியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று  (மார்ச் 1) தனது 70வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதில் கலந்து கொண்ட பீகார் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் பேசியதாவது, “ முதலில் நான் தாமதமாக வந்ததற்கு என்னை மன்னிக்கவும். தமிழ்நாடு சோசியலிச மற்றும் சமூக நீதிக் கருத்துகள் கொண்ட கட்சிகள் சங்கமிக்கும் தளமாக உள்ளது. இந்தியாவில் தற்போது அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது. நாட்டின் ஜனநாயகமே அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. மக்களுக்கு எப்படி அரசியல் கற்றுக் கொடுக்கிறீர்கள் என்பதை தமிழ்நாட்டில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்” என நேற்று தேஜஸ்வி யாதவ் பேசியுள்ளார்.