கோவையில் அதிகரித்துள்ள சாலை விதிமீறல்கள்:2 மாதங்களில் விபத்தில் 42 பேர் பலி -149 பேர் காயம்.!!

கோவையில் ஊரடங்கு உத்தரவு தளர்வு பின்னர் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து, விபத்துகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது .இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது: கடந்த 2 மாதங்களில் கோவை நகரில் நடந்த விபத்துக்களில் 47 பேர் இறந்துள்ளனர். 149 பேர் காயமடைந்துள்ளனர். கோவை மாநகரில் கடந்த 2 மாதங்களில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 21 ஆயிரத்து 945 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹெல்மெட் அணியாதது கார்களில் சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்ட காரணங்களுக்காக ரூ. 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதி வேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்பவர் களுக்கு ரூ 1000 அபராதம் விதிக்கப்படுகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது .சிறுவர் சிறுமிகளுக்கு இருசக்கர வாகனங்களை கொடுக்க கூடாது .அவ்வாறு ஓட்டி சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் , பெற்றோர் மீதும் வழக்கு பதிவு.செய்யப்படுகிறது இவ்வாறு அவர் கூறினார்”