மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் சிறுவன் உட்பட 3 கொலையாளிகளை மடக்கி பிடித்த போலீசார்..!

கோவை அருகே உள்ள சூலூர், காந்திநகரை சேர்ந்தவர் சரோஜினி ( வயது 82 )இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கை,கால், மற்றும் வாயில் பிளாஸ்திரி ஒட்டி கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொலையாளிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் முக்கிய தடையும் சிக்கியது. மூதாட்டியின் வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கொலையாளி தங்கி ஒரு தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார் .அவர் சரோஜினி தனியாக இருப்பதை அறிந்து அவரை கொலை செய்து நகைகளை கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது நண்பர்கள் 2 பேரின் உதவியை நாடியிருக்கிறார். அதன்படி அவர்கள் 3பேரும் திட்டமிட்டு மூதாட்டியின் வீட்டுக்கு சென்றுள்ளனர். கொலையாளி அந்த பகுதியில் வசிப்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மூதாட்டியின் வீட்டுக்கு சென்று அவர்கள் 3 பேரும் சேர்ந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர் . அப்போது சரோஜினி சத்தம் போட்டதால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து கை,கால்களை பார்சல் ஓட்டும் டேப்பால் ஒட்டி கட்டி போட்டு கொலை செய்துள்ளனர்.பின்னர் 5 பவுன் நகையை கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை அடித்த வழக்கில் தொடர்புடைய வசந்த் ( வயது 19 )அபினேஷ் ( வயது 23 )மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை நேற்று மடக்கி பிடித்து கைது செய்தனர். இவர்களில் வசந்த், அபினேஷ் பெங்களூரிலும், சிறுவன் நாகர்கோவிலிலும் பிடிபட்டனர்.போலீசாரிடம் சிக்கிய 3 பேர் மீதும் பெங்களூரு. உள்பட பல இடங்களில் குற்றவழக்குகள் உள்ளன.இது மேலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த வழக்கில் கொலையாளிகளை கைது செய்த தனிபடையினரை மேற்கு மண்டல ஐ.ஜி .சுதாகர், டி.ஐ.ஜி முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் பாராட்டினார்கள்.