தனியார் மருத்துவமனையில் ரூ.40 லட்சம் மோசடி- பெண் வரவேற்பாளர் கைவரிசை..!

கோவை சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர் ரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் அக்டோபர் 2021 வரை லதா (வயது 26) என்பவர் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். மேலும் பில்லிங் பிரிவிலும் வேலை பார்த்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு அந்த ஆஸ்பத்திரியில் கணக்கு தணிக்கை நடைபெற்றது. அதில், சிகிச்சை கட்டணத்தை வசூலித்த லதா அந்த பணத்தை மருத்துவமனை நிர்வாக கணக்கில் சேர்க்காமல் ரூ.40 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் சாய்பாபா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.