கோவையில் நள்ளிரவில் ஊருக்குள் ஹாயாக உலா வரும் காட்டு யானைகள் – சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ.!

கோவை அருகே நள்ளிரவில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தது. இதை அப்பகுதி மக்களும், வனத்துறையினரும் சேர்ந்து வனத்திற்குள் விரட்டினர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நஞ்சுண்டாபுரம் கிராமம் அமையுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து குட்டியானைகளுடன் வெளியேறிய காட்டு யானை கூட்டம் கிராமத்தின் சாலைகளில் சுற்றித்திரிந்தன. யானைகள் ஊருக்குள் புகுந்த தகவல் அறிந்த பொதுமக்களும், வனத்துறையினரும் யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதே போல நேற்று அதிகாலை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அரங்கசாமி என்பவரின் தோட்டத்திற்கு ஒற்றை யானை புகுந்துள்ளது. வெயில் காரணமாக வனப்பகுதிக்குள் வறட்சி நிலவுவதன் காரணமாக, தண்ணீர் மற்றும் உணவு தேடி காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைவது அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்..