காதலியிடம் வீட்டின் முன்பு பேசியதை தட்டி கேட்ட தாயாருக்கு கொலை மிரட்டல்- காதலன் கைது..!

பொள்ளாச்சியை அடுத்த மகாலிங்கபுரம் சின்னம்பாளையம் பகுதியை சேர்ந்த 37 வயது பெண். இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

இவரது 20 வயது மகளும், பொள்ளாச்சியை சேர்ந்த சரத்குமார் (21) என்பவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர். இதனை பெண்ணின் தாயார் கண்டித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சரத்குமார் தனது காதலியை சந்திக்க அவரது வீட்டிற்கு வந்தார். அங்கு தனது காதலியை அழைத்து வீட்டின் முன்பு நின்று பேசி கொண்டு இருந்தார். அவரது காதலி சரத்குமார் அங்கிருந்து செல்லுமாறு கூறினார். ஆனால் அவர் செல்லாமல் தொடர்ந்து பேசி கொண்டு இருந்தார். அப்போது பெண்ணின் தாயார் வீட்டிற்கு வந்தார்.

வீட்டின் முன்பு சரத்குமார் தனது மகளிடம் பேசுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சரத்குமாரிடம் எதற்கு இங்கு வந்தாய், எனது மகளிடம் எதற்கு பேசி கொண்டு இருக்கிறாய் என கேட்டார். இதனால் இருவருக்கம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சரத்குமார் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.பின்னர் சரத்குமார் அங்கிருந்து சென்றார். பயந்து போன பெண்ணின் தாயார் இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார்வாக்கப்பதிவு செய்து காதலியின் தாயாரை மிரட்டிய சரத்குமாரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.