- கோவையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற நபரின் கால் துண்டிப்பு
கோவை ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் காத்திருந்த ஒருவர் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (52). இவர் இன்று கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாம் பிளாட்பாரத்தில் ரயிலுக்காக காத்திருந்ததாக தெரிகிறது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில்
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு ரயில் முன்பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சக பயணிகள் அவரை தடுக்க முயன்றும், இரயில் முன் பாய்ந்த மகேஷ், ரயிலின் அடியில் சிக்கிக் கொண்டார். தகவலறிந்த ரயில் லோகோ பைலெட் ரயிலை உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
மகேஷ், ரயிலின் அடியில் சிக்கிக் கொண்டார். தகவலறிந்த ரயில் லோகோ பைலெட் ரயிலை உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
இதையடுத்து, அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள், பொதுமக்கள், ரயில்வே போலீசார் ரயிலின் அடியே சிக்கிய மகேஷை மீட்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இடது கால் துண்டான நிலையில் மீட்கப்பட்ட மகேஷ்,108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவசரம் கருதி, 108 ஆம்புலன்ஸ் ரெயில்வே பிளாட்பாரம் வரை வந்து, பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply