வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு – பட்டபகலில் துணிகரம

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு – பட்டபகலில் துணிகரம

கோவை மலுமிச்சம்பட்டி பகுதி குருவாயூர் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (28). எலக்ட்ரிசியன் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி மஞ்சு என்பவருடன் வசித்து வருகிறார்.

வெங்கடேஷ் வழக்கம் போல பணிக்குச் சென்றுள்ளார். பின்னர், 11.45 மணியளவில் அவரது மனைவி மஞ்சு, ஓத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

சுமார் 2 மணி நேர இடைவெளிக்குள்அவரது வீட்டின் அருகே வசிக்கும் ருக்மணி என்பவர் மஞ்சுவை அழைத்து, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். உடனடியாக வீட்டிற்கு வந்த மஞ்சு, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு 3.3 பவுன் நகைகள் திருட்டுப் போனது தெரியவந்தது. இதையடுத்து, வெங்கடேஷுக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவம் குறித்து வெங்கடேஷ்அளித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் காவல் துறையினர்திருட்டு நடந்த வீட்டிற்க்கு வந்து, பீரோ மற்றும் கதவில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.