கோவையில் ஆபத்தை உணராமல் கேஸ் பங்க் மற்றும் பெட்ரோல் பங்க் அருகே குப்பைகளுககு தீ வைத்த ஊழியர்கள்: அதிர்ஷ்டவசமாக தப்பிய அப்பகுதி மக்கள்!!!

கோவையில் ஆபத்தை உணராமல் கேஸ் பங்க் மற்றும் பெட்ரோல் பங்க் அருகே குப்பைகளுககு தீ வைத்த ஊழியர்கள்: அதிர்ஷ்டவசமாக தப்பிய அப்பகுதி மக்கள்!!!

சூலூர் அருகே குரும்பபாளையத்தில் பெட்ரோல் பங்க் மதில் சுவர் அருகே குப்பைகளுக்கு தீ வைத்த பெட்ரோல் பங்க் ஊழியர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உடனே தீ அணைக்கப்பட்டதால் தீ விபத்தில் இருந்து பெட்ரோல் பங்க் தப்பியது.

சூலூர் அருகே முத்து கவுண்டன் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பபாளையம் பகுதியில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் கீழ் இயங்கும் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்க் திருச்சி ரோடு மற்றும் அவனாசி சாலையை இணைக்கும் சாலையில் அமைந்து உள்ளதால் எப்போதும் கூட்டமாக காணப்படும். ஞாயிற்றுக்கிழமை இரவு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் குப்பைகளை பெட்ரோல் பங்க் மதில் சுவர் அருகே கொட்டி தீ வைத்தனர். தீ மல மலவென கொழுந்து விட்டு எறிந்ததால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து அந்த ஊழியர்களை கடிந்து கொண்டனர். இது பற்றி ஊழியர்களிடம் விசாரித்த போது முத்து கவுண்டன் புதூர் ஊராட்சியில் இருந்து குப்பைகளை வாங்க வருவதில்லை என இவ்வாறு குப்பைகளை மதில் சுவர்  அருகே கொட்டி எரிக்கிறோம் என கூறினர். ஆபத்தை உணராமல் இவர்கள் செய்த செயலால் அப்பகுதியில் திடீரென பதற்றம் ஏற்பட்டது. இந்த பெட்ரோல் பங்கிற்கு அருகே எரிவாயு பங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் நிகழாமல் உடனடியாக தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். எளிதில் தீப்பிடிக்க கூடிய பெட்ரோல் பங்கில் அருகில் கேஸ் பங்க் இருக்கிற  நிலையில் இவ்வாறு அலட்சியமாக மற்றும் அஜாக்கிரதையாக தீ வைத்தது பற்றி இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

இது சம்பந்தமாக முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு அபராதம் விதிக்க உள்ளதாக தெரிவித்தனர்.