கோவையில் பைக்கில் வைத்திருந்த ரூ. 2.80 லட்சம் பணம் கொள்ளை- தம்பதி போலீசில் புகார்..!!

கோவை ராமநாதபுரம், புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் கணேஷ் குமார் ( வயது 30) இவர் நேற்று தனது மனைவியுடன் அங்குள்ள வங்கியில் நகையை அடகு வைத்து ரூ2 லட்சத்து 80 ஆயிரம் கடன் வாங்கி வந்தார் .அந்தப் பணத்தை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தார். நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ஒரு பங்கில் பெட்ரோல் போட்டனர்.வீட்டில் வந்து பார்த்தபோது பைக்கில் இருந்த ரூ.2லட்சத்து 80 ஆயிரத்தை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர் .இது குறித்து கணேஷ்குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.