கோவையில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி- 800 மாணவ மாணவிகள் பங்கேற்பு..!

கோவை:
நாடு முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ந் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை மையமாகக் கொண்டு இந்த தினம் அனுசரிக்கப்படும். இந்த ஆண்டு சமப்படுத்துதல் என்ற மையக்கருத்தை கொண்டு பேரணிகள் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பாக கோவையில் நடந்த பேரணி முன்பு தொடங்கி மாவட்ட சுகாதார துறை அலுவலக முன்பு தொடங்கி ரேஸ்கோசை சுற்றி மீண்டும் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தை வந்தடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் சமீரன் கொடி அசைத்து வைத்து தொடங்கி வைத்தார். பேரணி தொடங்கும் முன்பு எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான உறுதிமொழியை மாணவ -மாணவிகள் எடுத்துக்கொண்டனர். 14 கல்லூரிகளைச் சேர்ந்த 800 மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு பதாகைகள், பேனர்கள் ஏந்தியவாறு சென்றனர். இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா, அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மாவட்ட திட்டம் மேலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.