கோவை மாவட்டம் சூலூர் சிந்தாமணிபுதூர் பகுதியில் கோவை கொச்சின் பைபாஸ் சாலை உள்ளது. தினம்தோறும் இந்த சாலையில் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் சேலத்தில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று எதிரே வந்த பெட்ரோல் கிடங்குக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியில் மோதியது.
அப்போது டேங்கர் லாரியின் பின்புறம் வந்த மற்றொரு டேங்கர் லாரியும் அடுத்தடுத்து மோதியது.இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர்கள் சிறிய காயத்துடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டிரைவரகளை மீட்டு ஆஸ்பத்திரிககு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்பட்டது. பைபாஸ் சாலை என்பதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Leave a Reply