கோவை: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சி. கே ,கே .நகரை சேர்ந்தவர் சிவக்குமார். பழவியாபாரி. இவரது மகள் ஜஸ்வந்த் திகா (வயது 20) இவர் கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பார்மசி கல்லூரியில் பிபார்ம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார் இவருக்கு தீபக் என்ற வாலிபருடன் காதல் இருந்து வந்தது .இந்த நிலையில் கல்லூரியில் இருந்து ஜஸ்வந்திகா திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தந்தை சிவக்குமார் காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். ஜஷ்வந்திகாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இதே போல கோவை ராமநாதபுரம் சவுரிபாளையம் ரோட்டைசேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் இந்திர லட்சுமி (வயது 19) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார் .30-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .இது குறித்து இவரது தந்தை நாகராஜன் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
Leave a Reply