பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு -கோவையில் பயங்கரம்..

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் 80 அடி ரோட்டை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ராஜா ( வயது 30) இவர் ராமநாதபுரம்,திருச்சி ரோட்டில் கே.டி.சி. அருகே நடந்து சென்றார். அப்போது ஒரு கும்பல் இவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .ரோட்டில் ரத்தம் சிந்தியது .பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை பார்த்ததும் அந்த பகுதியில் உள்ள மக்கள் ஓட்டம் பிடித்தனர். படுகாயம் அடைந்த ராஜா சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்குள்ள ஒரு அறையில் தங்கி இருந்த 4பேரை பிடித்து சென்றனர்.இவர்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி போது ஏற்பட்ட தகராறில் இது நடந்ததாக கூறப்படுகிறது..இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.