கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேர் இன்று சென்னை புழல் சிறைக்கு மாற்றம்..!

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4மணி அளவில் கார் வெடித்தது இதில் ஜமேஷாமுபின் ( வயது 28) என்பவர் பலியானார். இந்த வழக்கில் முகமது அசாருதீன் (23 )அப்சர் கான் ( 28 )முகமது தல்கா ( 25 ) முகமது ரியாஸ் ( 27 ) பெரோஸ் இஸ்மாயில் (26) முகமது நவாஸ் இஸ்மாயில்( 27 ) ஆகியோர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இந்த வழக்கை என். ஐ.ஏ .(தேசிய புலனாய்வு முகமை )விசாரித்து வருகிறது .ஜமேஷா முபின் வீட்டில் 75 கிலோ வெடி மருந்து மற்றும் ஐ.எஸ். ஆதரவு தொடர்பான குறிப்புகள் கைப்பற்றப்பட்டன. என். ஐ. ஏ. இந்த வழக்கை விசாரணை நடத்தி வருவதால் சென்னையில் உள்ள பூந்தமல்லி கோர்ட்டில் அனுமதி பெற்று கடந்த 4-ந்தேதி கோவை சிறையில் 6 பேரிடமும், என் ஐ.ஏ. அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் பூந்தமல்லி உள்ள என்.ஐ.ஏகோர்ட்டில் கைதான 6 பேரும்நாளை ( செவ்வாய்க்கிழமை) ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதற்காக கோவை சிறையில் உள்ள 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று திங்கள்கிழமை சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட உள்ளனர். அதன் பிறகு அவர்கள் பூந்தமல்லியில் உள்ள என் ஐ.ஏ.கோர்ட்டில் ஆஜர்படுத்தபடுகிறார்கள். இதையடுத்து கைதான 6 பேரையும் என்.ஐ.ஏ.காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது .இதற்காக என்.ஐ.ஏ.கோர்ட்டில் அனுமதி பெற்று கோவையில் உள்ள 6 பேர் வீடுகளிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.