தப்பித்தது இம்ரான்கான் பதவி… நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு.!

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ள இம்ரான்கான் தன் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வேன் என்று அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், சற்றுமுன் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்ற துணை சபாநாயகர் நிராகரித்து உள்ளார்.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி தீர்மானத்தை நாடாளுமன்ற துணை சபாநாயகர் நிராகரித்து உள்ளார்.