வீட்டில் நகை திருடிய பியூட்டிசியன் கைது.

கோவை போத்தனூர் மெயின் ரோட்டைசேர்ந்தவர் சித்திக் அகமது. இவரது மனைவி ரஹமத் நிஷா( வயது 40)இவரது வீட்டுக்கு பேரூர் பச்சாபாளையம் கிருஷ்ணா காலனி சேர்ந்த பேச்சியம்மாள் என்ற ஷிவானி (வயது 26) பியூட்டிரிசியன் பணிக்கு வந்தார்.இவர் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற பின் வீட்டில் பீரோவில் இருந்த 5 பவுன் நகைகளை காணவில்லை.இதுகுறித்து ரஹமது நிஷா போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.புகாரில் தனக்கு பியூட்டிசன் செய்ய வந்த பேச்சம்மாள் என்ற சிவானி தான் தன் வீட்டில் இருந்து 5 பவுன்தங்க செயின்களை திருடி இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக போத்தனூர்போலீசார் ஷிவானி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.