7 நாளில் 19 பேர் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை…

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 2 பெண்கள் உட்பட 19 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 01.01.2023 முதல் 13.12.2023 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 449 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 110 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 81 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 13 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம்படுத்திய 5 குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2 குற்றவாளிகள், மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த 1 குற்றவாளி மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் 2 குற்றவாளிகள் என மொத்தம் 667 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டம் மற்றம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கடந்த 07.12.2023 முதல் 13.12.2023 வரையிலான ஒரு வாரத்தில் 2 பெண்கள் உட்பட 19 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குற்றவாளிகள் சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் (23) என்பவர் கடந்த 23.11.2023 அன்று, வழிப்பறி செய்த குற்றத்திற்காக வேப்பேரி காவல் நிலையத்திலும், தரமணியைச் சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி, 26 என்பவர் கடந்த 24.11.2023 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக தரமணி காவல் நிலையத்திலும், திருவொற்றியூர் அகில் (எ) அகில் அகமது, 28 என்பவர் கடந்த 15.11.2023 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக திருவொற்றியூர் காவல் நிலையத்திலும், வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

தண்டையார்பேட்டை குமரன், 24, கொறுக்குப்பேட்டை ரஞ்சித், 28 ஆகிய இருவரும் கடந்த 08.11.2023 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக ஆர்.கே.நகர் காவல் நிலையத்திலும், கோயம்பேடு விஸ்வநாதன் (எ) விஸ்வா, 25, வில்லிவாக்கம் பாபு (வயது 23) ஆகியோர் கடந்த 24.11.2023 அன்று வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டதற்காக வில்லிவாக்கம் காவல் நிலையத்திலும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் ராமாபுரம் கோபாலகிருஷ்ணன் (எ) கோபால், 55 என்பவர் வங்கியில் போலியான ஆவணம் முலம் பணத்தை கையாடல் செய்த குற்றத்திற்காக மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி தடுப்பு பிரிவிலும் (Bank Fraud), அடையாறைச் சேர்ந்த மெர்சி தீபிகா (-41) என்பவர் போலியான ஆவணங்கள் மூலம் பணம் பெற்று, வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய குற்றத்திற்காக, மத்திய குற்றப்பிரிவு, வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். அதே போல வில்லிவாக்கம் வினோத்குமார், 23 என்பவர் கடந்த 07.11.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக, CMBT காவல் நிலையத்திலும், சிந்தாதிரிப்பேட்டை அருண் (எ) அருணாச்சலம் என்பவர் 12.11.2023 அன்று அடிதடி குற்றத்தில் F-2 எழும்பூர் காவல் நிலையத்திலும், பிராட்வே அனிஷ், 53 போக்சோ சட்டத்தில் W-12 துறைமுகம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் (AWPS), 13.விக்கி (எ) கோழிக்கால் விக்கி, வ/27, குள்ள புருஷோத், 25, ஆகிய இருவரும் 22.10.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக P-3 வியாசர்பாடி காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதே போல தீனதயாளன் (எ) தீனா, வ/43, த/பெ.சந்திரன், வியாசர்பாடி என்பவர் 20.11.2023 அன்று கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக புழல் காவல் நிலையத்திலும், துளசிராமன் (எ) ராமாபுரம் சதிஷ், 35, என்பவர். 02.12.2023 என்பவர் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திய குற்றத்திற்காக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிலும், மாணிக்சந்த், வ/41, முத்துராஜா, வ/33, த/பெ.சிவசங்கரன், சிக்கராயுரம், சிறுகளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய இருவரும் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்திய குற்றத்திற்காக வளசரவாக்கம் காவல் நிலையத்திலும், 19.லதா, பெ/வ.53, க/பெ.முருகேசன் (எ) சின்னபையன், வில்லிவாக்கம் என்பவர் 16.11.2023 அன்று மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக V-4 ராஜமங்கலம் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் ஆண்ட்ரூஸ், மிதுன்சக்கரவர்த்தி, அகில் (எ) அகில்அகமது ஆகிய 3 நபர்களை கடந்த 07.12.2023 அன்றும், குமரன், ரஞ்சித், விஸ்வநாதன் (எ) விஸ்வா, பாபு, கோபாலகிருஷ்ணன் (எ) கோபால், மெர்சி தீபிகா ஆகிய 6 நபர்களை கடந்த 08.12.2023 அன்றும், வினோத்குமார் என்பவரை கடந்த 09.12.2023 அன்றும், அருண் (எ) அருணாச்சலம், அனிஷ், விக்கி (எ) கோழிக்கால் விக்கி, புருஷோத்தமன் (எ) குள்ள புருஷோத் ஆகிய 4 நபர்களை 11.12.2023 அன்றும், தீனதயாளன் (எ) தீனா, துளசிராமன் (எ) ராமாபுரம் சதிஷ், ஆகிய 2 நபர்களை 12.12.2023 அன்றும், மாணிக்சந்த், முத்துராஜா மற்றும் லதா ஆகிய 3 நபர்களை நேற்றும் (13.12.2023) குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 19 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.