மனைவிகளை தேர்வெழுத அனுப்பிவிட்டு குழந்தைகளை தொட்டில் கட்டி தூங்க வைத்த கணவன்கள்

 

தாயுமானவர்களான தந்தைகள்

குருப்-4 க்கு மனைவிகளை தேர்வெழுத அனுப்பிவிட்டு குழந்தைகளை தொட்டில் கட்டி தூங்க வைத்த கணவன்கள்

தமிழ்நாடு அரசு காலி பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் குருப் 4 தேர்வு நடந்தது. கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் கோவையில் உள்ள தேர்வு மையங்களில் ஏராளமான பெண்கள் தேர்வெழுதினர். அதில் சிலர் பாலூட்டும் கை குழந்தைகளுடன் தேர்வெழுத தாய்மார்கள் வந்திருந்தனர். நீலம்பூரில் உள்ள கே பி ஆர் கல்வி நிறுவனத்தில் நிறுவப்பட்ட தேர்வு மையங்களுக்கு தாய்மார்கள் தேர்வெழுத சென்ற நிலையில் தந்தைகள் குழந்தைகளை பார்த்துக்கொண்டனர். அப்போது திருப்பதி என்பவர் குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டி குழந்தையை பார்த்துக்கொண்டார். கே பி ஆர் கல்வி நிலையத்தில் உள்ள வளாகத்தில் மரத்தடியில் தொட்டில் கட்டி குழந்தையை கவனித்துக்கொண்டார். திருப்பதியின் மனைவி மகேஷ்வரி வரும் வரை திருப்பதி கை குழந்தையை தாய் போல பார்த்துக்கொண்டது அவரை தாயுமானவாராக பாவித்திருக்கின்றது. இதே போன்று சிறு குழந்தைகளுடன் ஏராளமானோர் தேர்வெழுத வந்த நிலையில் குழந்தைகளின் தகப்பன்களே குழந்தைகளை கனிவுடன் பார்த்துக்கொண்டனர்