கோவையில் வரதட்சணை கேட்டு மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை..!

கோவை :கோவை புதூர் கருப்பராயன் கோவில் வீதியில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 28) இவரது மனைவி நந்தினி ( வயது 26) இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்தார். இது தொடர்பான வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது .இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கணவர் கனகராஜுக்கு நீதிபதி ஆயுள் தண்டனையும், ரூ1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்..