கோவை பூ மார்க்கெட் தெப்பக்குளம் வீதியை சேர்ந்தவர் ரவிக்குமார் இவரது மகன் கனக விக்னேஷ் (வயது27)இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவர் சூலூர் பக்கம் உள்ள சங்கோதிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் சர்வீஸ் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில் நேற்று எந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வரும் அழகு ராஜா என்பவர் தவறுதலாக சுவிட்சை போட்டு விட்டார். இதனால் எந்திரத்தில் சிக்கிககை விக்னேஷ் படுகாயம் அடைந்தார். தனியார் மருத்துவர் எடுத்துச் சென்றனர் .அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து இவரது மனைவி வர்ஷினி சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் அந்த நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வரும் அழகுராஜ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து,விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply