பரபரக்கும் துப்பாக்கி சூடு நடந்தது எப்படி..? கோவை துணை போலீஸ் கமிஷனர் சந்தீஷ் பேட்டி..!

கோவை அருகே உள்ள சரவணம்பட்டியில் இன்று நடந்த துப்பாக்கி சூடு குறித்து போலீஸ் துணை கமிஷனர் சந்தீஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-.கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் நடந்த ரவுடி சத்தியபாண்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைந்து நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் காவல் விசாரணையில் உள்ள சஞ்சய் ராஜாவிடம் விசாரணை செய்த போது சென்னையில் அவனது பைக்கில் வைத்திருந்த ஒரு துப்பாக்கியை பறிமுதல் செய்தோம். மற்றொரு துப்பாக்கி கோவையில் வைத்திருப்பதாக கூறினார்.இந்த துப்பாக்கியை சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேடு,முருகன் கோவில் வடபுறம் வைத்திருப்பதாக கூறினார். இதை அடுத்து அவரை இன்று காலை 6-30 மணி அளவில் அங்கு அழைத்துச் சென்றோம். அங்குள்ள பள்ளிக்கூடத்துக்கும் மலைப் பகுதிக்கும் இடையே ஒரு இடத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி சஞ்சீவி ராஜா எடுத்தார். கண் இமைக்கும் நேரத்தில் இரண்டு தடவை சுட்டார் அப்போது அவனுடன் சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண லீலா அங்கு நின்ற ஒரு மரத்தின் பின்புறம் ஒளிந்து கொண்டார். அதனால் அவர் உயிர் பிழைத்தார். நல்லவேளை யார் மீதும் அந்த குண்டுகள் பாயவில்லை.இதையடுத்து அங்கு இருந்த சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தன்னிடமிருந்து கை துப்பாக்கியால் தற்காப்புக்காக சஞ்சீவி ராஜாவின் இடது கால் முட்டியில் சுட்டார்.இதனால் நிலை குலைந்த சஞ்சய் ராஜா துப்பாக்கியை கீழே போட்டார்.பின்னர் அவரை பலத்த பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளோம். சஞ்சய் ராஜா மீது கொலை முயற்சி கொள்ளை, திருட்டு, ஆள் கடத்தல் உட்பட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.இவர் பயன்படுத்திய துப்பாக்கி நாட்டு துப்பாக்கி ஆகும்.சஞ்சய் ராஜா விசாரணையின் போது தனக்கு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல நடிப்பார். கோவையில் உள்ள இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே உள்ள ” ஈகோ” காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.