ஸ்கூட்டர் மீது லாரி மோதல் .முதியவர் சாவு

கோவை கவுண்டம்பாளையம், கிரி நகர் ,2வது விதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் ( வயது 65) நேற்று இவர் ஸ்கூட்டரில் தடாகம் ரோடு- இடையர்பாளையம் சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாகவந்த டேரஸ் லாரி இவரது ஸ்கூட்டர் மீது மோதியது .இதில் படுகாயம் அடைந்த ராமதாஸ் அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரோஜா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைநடத்தினார் .இது தொடர்பாக டாரஸ் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.