புதுடெல்லி: மீண்டும் கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு மக்களை தீவிரமாக பாதிக்கத் தொடங்கிவிட்டது.
ஒமிக்ரான் ஏற்கனவே பாதித்தவர்களையும் மீண்டும் பாதிப்பதாக தெரியவந்துள்ளது. தற்போது மேலும் பிறழ்ச்சியடைந்த ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் தொற்றும்போது ஏற்படும் அறிகுறிகள் வாசனை இழப்பு அல்லது காய்ச்சல் என்பதுடன் நின்றுவிடவில்லை. வேறு சில அறிகுறிகளையும் இந்த கோவிட் நோய் ஏற்படுத்துகிறது. ஓமிக்ரான் வகை மாறுபாடு, கொரோனாவின் மிகவும் பிறழ்ந்த பதிப்பாகும். இதன் துணை-வேறுபாடு BA.5 அதன் ஸ்பைக் புரதத்தில் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது, இது முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கும் தொற்று ஏற்படுவதற்கு காரணமாக உருவாகியிருக்கிறது.
COVID-19 இன் மிகவும் பிறழ்ந்த பதிப்பு ஒமிக்ரான் தென்னாப்பிரிக்காவில் 2021 நவம்பர் மாதத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர், இந்த மாறுபாடு பல முறை பிறழ்ந்து, புதிய வகைக கொரோனா மாறுபாடுகள் ஏற்படவும் வழிவகுத்தது. உலகெங்கிலும் தங்கள் தாக்கத்தைக் கொண்டிருக்கும் BA.4 மற்றும் BA.5 என இரண்டு வைரஸ்களும் மிகவும் ஆபத்தான துணை வகைகளாகும்.
ஓமிக்ரானின் இந்த இரண்டு துணை வகைகளும் கூடுதலான பிறழ்வுகளை அவற்றின் ஸ்பைக் புரதத்தில் கொண்டு செல்வதால், கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
வைரஸுக்கு எதிராக ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான மக்கள் தடுப்பூசி போட்டுள்ள நிலையில், இப்போது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் என்றும், மீண்டும் கோவிட் பாதிக்காது என்பதுதான் மனதில் தோன்றும் எண்ணமாக இருக்கும். ஆனால் கொரோனா முடிவதாக தெரியவில்லை உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஓமிக்ரானின் BA.4 மற்றும் BA.5 துணை வகைகளின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, அவற்றின் ஸ்பைக் புரதத்தில் உள்ள பிறழ்வுகள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்களைத் தாக்க உதவுகிறது என்பதன் பொருள், கோவிட் பாதித்து குணமானவர்களுக்கும் மீண்டும்று தொற்று ஏற்படலாம் என்பதுதான். மீண்டும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது? இதற்கு முன்பு கொரோனா ஏற்பட்டபோது இருந்த அறிகுறிகளைத் தவிர, தற்போது மிகவும் வேறுபட்ட அறிகுறிகளை ஏற்படுத்தலாம் அல்லது சிலருக்கு அறிகுறியே இல்லாமலும் கோவிட் ஏற்படலாம்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில், கோவிட்-19 இன் மிகவும் வீரியம் மிக்க ஓமிக்ரான் மாறுபாட்டுடன் தொடர்புடைய பல அறிகுறிகளைப் பற்றி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இருப்பினும், அதன் ஸ்பைக் புரதத்தில் தற்போதைய பிறழ்வுகளின் அடிப்படையில் தற்போதைய ஒமிக்ரான் பிறழ்வு ஏற்படுத்தும் புதிய அறிகுறிகள் என சில பட்டியலிடப்பட்டுள்ளது.
BA.5 மற்றும் BA.4 ஆகியவை மெதுவாக வைரஸின் ஆதிக்க விகாரங்களில் ஒன்றாக மாறி வருகின்றன. இருப்பினும், பாரம்பரிய அறிகுறிகள் இன்னும் செல்லுபடியாகும் அனோஸ்மியா, வாசனை இழப்பு, மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல் போன்றவை ஒமிக்ரானின் பழைய அறிகுறிகள்.
ஓமிக்ரானின் 5 புதிய அறிகுறிகளின் பட்டியல் இது
மூக்கு ஒழுகுதல்
தலைவலி
தும்மல்
தொண்டை வலி
தொடர்ந்து இருமல்
Leave a Reply