பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் திடீர் மாயம்..!

கோவை பீளமேடு, உடையாம்பாளையம் அன்னமார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முத்து . இவரது மனைவி சுபாக்காள் ( 56 ) இவர் நேற்று அங்குள்ள கடைக்கு சென்றார் ..திரும்பி வந்து பார்த்த போது இவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் செயினை காணவில்லை. தவறி விழுந்ததா? திருட்டு போனதா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..