தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை..!

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள ஜோதி காலனி (விரிவாக்கம்)பகுதியைச் சேர்ந்தவர் ரூபேஷ்குமார் ( வயது 45 )அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்து 8-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பாண்டிச்சேரியில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவிற்கு சென்றிருந்தார்.நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ரூபேஷ் குமார் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கணேஷ் மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.