தேச பக்தி இருப்பவர்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவார்கள்- கோவையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி..!

கோவையில் 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர ஓட்டம்
நிகழ்ச்சி நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் தனியார் கல்லூரியில்
இந்து தொடங்கியது.

இதில்மத்திய இணை அமை ச்சர் எல். முருகன் கலந் து கொண்டு காவி வண்ண கொடியை அசைத்து சுதந்திர ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
75 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள்
நடத்தப்பட்டு வருகின்றது. இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை தேசிய
கொடியேற்ற பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களை நினைவு கூறும் விதமாகவும், தேசிய கொடியை வரும் கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் விதமாகவும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றது. மலை கிராமங்களில் கூட தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகின்றது .

தமிழகத்தில் சுதந்திரத்திற்காக எண்ணற்ற தலைவர்கள் போராடி இருக்கின்றனர்
சுதந்திரத்திற்காக போராடிய அறியப்படாத தலைவர்கள் நிறைய பேர்
இருக்கின்றனர். தேசிய பக்தி இருப்பவர்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவார்கள். 2047 -ல் அப்துல் கலாம் கண்ட கனவான வல்லரசாக இந்தியா மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.