பக்கத்து வீட்டுகாரரிடம் மது குடிக்க பணம் கேட்டதை தட்டி கேட்ட மனைவிக்கு அரிவாள் வெட்டு- கணவர் கைது..!

கோவை பாப்பம்பட்டி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது
39). இவர் கடந்த 5 வருடத்துக்கு முன்பு மணி என்கிற மகாமுனி (43) என்பவரை
2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் மகாமுனிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி
லட்சுமியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல மகாமுனி, லட்சுமியிடம் பணம் கேட்டார். ஆனால்
அவர் பணம் தரவில்லை. இதனால் மகாமுனி பக்கத்து விட்டை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரிடம் சென்று குடிக்க பணம் கேட்டார். அதற்கு அவரும் பணம் தர மறுத்து விட்டார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்தநிலையில் மகாமுனி பக்கத்து
வீட்டுகாரரிடம் பணம் கேட்டது லட்சுமிக்கு தெரியவந்தது. இதனை அவர் தட்டிக்கேட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம்
ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த மகாமுனி வீட்டில்
இருந்த அரிவாளை எடுத்து லட்சுமியின் கழுத்தில் வெட்டினார்.
பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சுறுண்டு விழுந்தார். அவரின்
சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அங்கு லட்சுமி ரத்த
வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு கோவை
அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார்
சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் கொலை
வழக்குப்பதிவு செய்து மகாமுனியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில்
ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.