டாஸ்மாக் பாரில் கோஷ்டி மோதல்: 2 பேர் படுகாயம்-போலீசார் வழக்குப்பதிவு ..!

கோவை ரத்தினபுரி கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் செய்யது அன்வர் (வயது 22) சரக்கு ஆட்டோ டிரைவர். நேற்று இவர் சங்கனூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார் .அப்போது அங்கு மது அருந்தி கொண்டிருந்த 3 பேர் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தனர். இதை செய்யது அன்வர் கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது .இதில் ஒருவரை ஒருவர் கல்லால் தாக்கி கொண்டனர். இதில் செய்யது அன்வர்,மற்றொரு கோஷ்டியை பிரவீன் டக்ளஸ் ஆகியோர் படு காயமடைந்தனர். இது குறித்து ரத்தினபுரி போலீசில் செய்யது அன்வர் கொடுத்த புகாரின் பேரில் பிரவீன் டக்ளஸ், உதயகுமார், ராஜகோபால், ஆகியோர் மீதும் ,பிரவீன் டக்ளஸ் கொடுத்த புகாரின் பேரில் செய்யது அன்வர், ஜாபர் செரீப் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..